Tuesday 21 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 7

கால் விரலை வெச்சுப்பாரு! :

உணர்ச்சிகளைப்பத்தி கத்துக்கறதுல என்ன முக்கியம்ன்னா அதை எல்லாம் எப்படி நண்பனாக்கிக்கறது என்கிறது. ம்ம்ம்ம்அதாவது உணர்ச்சிகள் பொல்லாது, தப்பு, குழப்பறது, ஆளை உருட்டிப்போடுத்துன்னு எல்லாம் அதைப்பத்தி நினைச்சுகிட்டு இருந்தா நம்மால அதைப்பத்தி பொறுமையோட சரியா புரிஞ்சுக்க முடியாது.

நான் சின்னப்பையனா இருந்தப்ப உணர்ச்சிகளைப்பத்தி நினைக்காமலே இருந்தேன். அது என்னை பயமுறுத்திச்சு. அது என்னை முழுங்கிடும்ன்னு பயம். அப்புறம் கல்லூரி போன பிறகு நாடக வகுப்பு ஒண்ணுல சேர்ந்தேன். அதுல எங்க டீச்சர் மேரி. அவங்க என்ன எப்படி இருக்கே? எப்படி இருக்கே?’ ந்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. எனக்கோ ஒரே பயம். வீட்டிலேந்து ரொம்ப தூரத்தில இருந்தேன். அதனால துக்கமாகவும் பயமாகவும் இருந்துச்சு. ஒரு நாள் எப்படி இருக்கேன்னு கேக்கறீங்களே, எனக்கு என் உணர்ச்சிகளைப்பத்தி நினைக்கவே பயமா இருக்கு. அதைப்பத்தி நினைச்சா அதுல மூழுகிப்போயிடுவேனோன்னு பயமா இருக்குன்னேன். அவங்க சொன்னது அட, நான் என்ன குளத்துல குதிக்கவா சொன்னேன்? தண்ணில கொஞ்சம் கால் விரலை மட்டும் வெச்சுப்பாரு!

அது என் வாழ்க்கையையே மாத்திடுச்சு! மேரி டீச்சர் சொன்னதை கொஞ்சம் சோதிச்சுப்பாத்தேன். ஆச்சரியமா உணர்ச்சிகளில மூழ்கிப்போகாம அவற்றை கவனிக்க முடிஞ்சது! உணர்ச்சிகளைப்பாத்து பயந்து ஒளிஞ்சுக்காம அவற்றை கிட்டே போய் பார்க்க முடிஞ்சது! கால் விரலை விட்டுப்பாத்தா தண்ணி ரொம்ப சில்லுன்னோ சூடாவோ இல்லை இதமாத்தான் இருந்தது! இன்னும் உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுக்க முடியலைதான். ஆனா அது இப்ப என்னை பயமுறுத்தலை!

சதுரங்க வேட்டை: சதுரங்கம் ஆடி இருக்கீங்களா? இதோட விதி முறைகள் தெரியாதவங்களுக்கு இது ஒண்ணுமே புரியாது! காய்கள் சிலது நேரா போகும், சிலது குறுக்கே, சிலது குதிக்கும், சிலது கோணலா மட்டுமே போகும், சிலது நேரா மட்டுமே போகும்!!
டேவிட் கரூசோ ந்னு ஒரு நண்பர். அவர்கிட்டே பேசிகிட்டு இருக்கும்போது அவர் சொன்னார்: “உணர்ச்சிகள் எல்லாம் சதுரங்க காய்கள் மாதிரி. அவை குறிப்பிட்ட மாதிரிதான் நகரும்!” அது ஆச்சரியமா இருந்தது! இவை எப்படி எந்த திசையில் பயணிக்கும் என்கிறது தர்க்க ரீதியானதா! அவை எப்படி எங்கே நகரும் எதை மாத்தும் என்கிறதுக்கு அடிப்படை விதிகள் இருக்கு போலிருக்கு!






No comments:

Post a Comment