Monday 20 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 6

உன்னை நீ உணர்.:

இது வரைக்கும் என் வாழ்க்கையில உணர்ச்சிகள் என்கிறது முழுக்க எனக்கு புதிராவே இருந்தது. திடீர்ன்னு ஒரு உணர்ச்சி வரும்சந்தோஷமோ கோபமோ அழுகையோஅது பாட்டுக்கு என்னை ஆட்கொள்ளும். அப்புறம் அதோட ராஜ்யம்தான். இப்ப நான் உணர்வுசார்நுண்ணறிவு பத்தி கத்துக்கொண்டு இருக்கேனா? அதனால அதெல்லாம் இப்ப கொஞ்சம் புரியுது. இருந்தாலும் சமயத்துல இன்னும் குழப்பமாவே இருக்கு.

Sometimes I’m Bombaloo? ந்னு ஒரு புத்தகம். அதுல ஒரு சின்ன பொண்ணுக்கு ரொம்ப கோவம் வரும். அப்படி வரப்ப அவளுக்கு தான் வேற ஒரு பொண்ணா அவ மாறிடுவதா தோணும். ம்ம்ம்ம்.. சிலர் சில சமயம் பலமான உணர்ச்சிகளால அடியோட புரட்டிப்போடப்படுவாங்க போலிருக்கு! அனேகமா கோபம், சில சமயம் துக்கம் ,இல்லை பயம், பொறாமை, குற்ற உணர்ச்சி; இல்லை சில சமயம் எல்லாம் கலப்படமா இனம் புரியாம ஒரு பெரிய உணர்ச்சிப்பந்துஉருண்டு உருண்டு பெரிசாகி டமால்ன்னு வெடிச்சு சிதற மாதிரி……. சில சமயம் குஷி கூட ஆளை தலை கால் தெரியாம ஆக்கிடும்!

கோபம் பயம் இரண்டையும் சிலர் எதிர்மறை உணர்ச்சி என்கிறாங்க. ஆனா நான் இதை வேற மாதிரி பாக்கிறேன். எனக்கு தோணுவது என்னன்னா உணர்சிகள் நம்மோட ஒரு அங்கம். அதில நல்லது கெட்டதுன்னு ஒண்ணுமில்லை. அதெல்லாம் தகவலும் சக்தியும். நாம் அத வெச்சுகிட்டு என்ன செய்ய முடியுமோ அது வேணா நல்லதாவோ கெட்டதாவோ இருக்கலாம். ம்ம்ம்ம்... சுலபமா சொல்லணும்ன்னா அது மின்சாரம் மாதிரி

மின்சாரத்தை வெச்சுகிட்டு செய்யறது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம் இல்லையா? ஆனா அது எவ்வளோ தூரம் இப்ப நம் வாழ்க்கைக்கு பிரயோசனமாகுது! அதே சமயம் மின்சாரம் பாயற கம்பியை போய் தொட்டா அது உயிருக்கே ஆபத்தா முடியலாம். இல்லையா? ஆக மின்சாரம் மோசமில்லை; அதை சரியா பயன்படுத்தணும்.

எதுவுமே நாம் எப்படி பயன்படுத்தறோம் என்கிறதை பொறுத்து கெட்டதாவோ நல்லதாவோ இருக்கு!


No comments:

Post a Comment