Tuesday 14 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு -4


சூட்டிகையா இருக்க மூன்று படிகள்:

இங்கே சிக்ஸ் செகண்ட்ஸ் உணர்வுசார்நுண்ணறிவை பயிற்சி செய்ய ஒரு வழி வைத்து இருக்கோம். அதில மூணு படிகள் உண்டு.
  1. உன் எதிர்வினையை கவனி. இதுக்கு உன்னை நீ உணர் ந்னு பேர் வெச்சு இருக்கோம். ஏன்னா நீங்க உங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு கவனமா பார்க்கணும்ன்னு விரும்பறோம்.
  2. உன் எதிர்வினைக்கு பொறுப்பு எடுத்துக்கொள். உன்னை தேர்ந்தெடுன்னு பேர் வெச்சிருக்கோம். ஏன்னா உங்களுக்கு எப்படி உணரலாம், யோசிக்கலாம், எதிர்வினை செய்யலாம்ன்னு நிறைய தேர்வுகள் இருக்கு. இதில நீங்க எதை தேர்ந்தெடுக்கப்போறீங்க?
  3. எது முக்கியம் என முடிவு செய். உனக்குக்கொடுத்துக்கொள் ந்னு பெயர் வெச்சிருக்கோம். ஏன்னா இப்போது உங்களைப்பத்திய யோசனையா மட்டும் இல்லாம உலகத்துக்கும் மத்தவங்களுக்கும் என்ன நீங்க தரப்போறீங்க என்பது முன்னே நிற்குது.
இந்த மூணு படிகள் எப்பவுமே சுலபம் இல்லைத்தான். ஆனாலும் பழகப்பழக இது சுலபமாயிடும். அதனால இதை ஒரு சக்கரமா காட்டறோம். ஒரு சுற்று முடிச்சா அடுத்த சுற்று கொஞ்சம் சுலபம். அதனால திருப்பித்திருப்பி இதை செய்ய நமக்கு என்ன வேணும் என்ன செய்யணும் என்கிறது தெளிவாயிடும்.

அடுத்த சில நாட்கள் உங்களை இந்த மூணு படிகளில கவனிங்க. போகப்போக படிகள் சுலபமாகுதா இல்லை கஷ்டமாகுதா? சில சமயம் மட்டும்தான் இந்த படிகளை செய்கிறோமா? ம்ம்ம்ம் சிலர்கூட இருக்கும் போது இன்னும்கவனமாகவும் சிலர் கூட அவ்வளோ எச்சரிக்கையா இல்லாமலும் செய்கிறோமா?

இந்த சார்ட்டை பார்த்து உங்க முன்னேற்றத்தை கவனிங்க. இந்த உதாரணங்கள் இந்த படிகளை கவனிக்காமலும் அடுத்து கவனிச்சும் செயல்படுவதில இருக்கிற வித்தியாசங்களை காண்பிக்கும்.

இந்த படிகளை செயலுக்கு கொண்டு வறீங்களா?
படிகள் செயலில் இல்லாவிட்டால் சொல்லக்கூடியது.
படிகள் செயலில் இருக்கும் போது சொல்லக்கூடியது.
உன்னை நீ உணர்.
உன் எதிர்வினையை கவனி
உணர்வுகள் அது பாட்டுக்கு வரும். ஏன்னு தெரியாது.
என் உணர்ச்சிகள் தோன்ற என்ன என்ன அந்த படிகளில நடந்தது; நான் என்ன செஞ்சேன் ந்னு தெளிவா தெரியுது.
உன்னை தேர்ந்தெடு.
உன் எதிர்வினைக்கு பொறுப்பு எடுத்துக்கொள்.
செயல் முதலில்; சிந்தனை பிறகு.. அதில தேர்வு ஒண்ணும் இல்லை.
எப்படி எதிர்வினை செய்யனும்ன்னு தேர்வுகள் இருக்கு; யோசிக்காம என்னை தற்காத்துக்கவோ இல்லை தாக்கவோ தேவையில்லை.
உனக்குக்கொடுத்துக்கொள்.
எது முக்கியம் என முடிவு செய்.
மத்தவங்களோ உலகமோ எக்கேடு கெட்டு போன என்ன? எனக்கு என்ன வேணும் என்கிறதை மட்டுமே கவனிக்கிறேன்.
மத்தவங்களோடயும், உலகத்தோடயும் நான் ஒரு தொடர்பில இருக்கேன். அதனால நான் என் வேலையை செய்ய கடமை பட்டிருக்கேன்.



No comments:

Post a Comment