Saturday 11 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு -3


ஆரம்பம்:

உணர்வுசார்நுண்ணறிவில ரொம்ப நல்ல விஷயம்ன்னா அது எல்லாருக்கும் இருக்கு என்கிறதோட அதை எல்லாரும் வளர்த்துக்கலாம் என்கிறதுதான்.
அதுக்கு யாரும் கவனம் அதிகமா கொடுக்காம இருக்கலாம் அல்லது நீங்க ஏற்கெனெவே அதைப்பத்தி நிறைய கத்துகிட்டு இருக்கலாம். ஆனா எப்படி இருந்தாலும் இதில நாம் வளர முடியும். இத உள்ளே வளருவதுன்னு சொல்லலாம். எல்லாருமே வெளியே வளருவாங்க. அதாவது இன்னும் உசரமா ஆகிறாப்போல. ஆனா அந்த நேரத்துல அவங்க உள்ளே வளருகிறாங்களா?
நீங்க எப்படி உள்ளே வளர்ந்து இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியுமில்லையா? உதாரணமா சின்ன வயசில நீங்க எல்லாம் எனக்கே எனக்கு; எனக்கு மட்டும்தான்னு இருந்திருப்பீங்க. பல விஷயங்களில எச்சரிக்கையோட இல்லாம இருந்திருப்பீங்க. இப்ப அப்படி இல்லை, இல்லையா? இப்பல்லாம், எதையும் செய்யும் முன்னே கொஞ்சம் யோசிச்சு செய்வீங்களா இருக்கும். இப்பல்லாம் ரொம்ப களைப்பாயிட்டா கொஞ்சம் ஓய்வு எடுத்துப்பீங்களா இருக்கும். இந்த மாதிரி சிலதுல மத்தவங்க இன்னும் வளர்ந்து இருக்கலாம். சிலதுல நீங்க இன்னும் அதிகமா வளர்ந்து இருக்கலாம். இதெல்லாம் என்ன சொல்லுதுன்னா உள்ளே வளருவது நம்மால முடியும்! நீங்க உள்ளே இன்னும் அதிகமா வளர விருப்பம் இருக்கா?
இது சீரியஸான கேள்வி. இந்த நுண்ணறிவு வளரணும்ன்னு விருப்பம் உங்களூக்கு இல்லேன்னா நீங்க அதுக்கானதை செய்ய மாட்டீங்க.
மாறா அந்த லிஸ்டுல இடது பக்கம் இருக்கறது குறைவாயும் வலது பக்கம் இருக்கறது அதிகமாயும் இருக்கணும்ன்னு விருப்பப்பட்டா. ரைட்! நீங்க வளர விரும்பறீங்க. அது உங்களால முடியும்!

உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள்:

நான் ஆறு வினாடிகள் (Six Seconds) என்கிற நிறுவனத்துக்கு வேலை செய்யறேன். அதுக்கு ஏன் ஆறு வினாடிகள்ன்னு பேர் ந்னா அப்படித்தான் உணர்ச்சிகள் வேலை செய்யுது! நடக்கறதெல்லாத்தையும் ஒரு நகர் படமா பார்க்கப்போனா இப்படித்தான் இருக்கும்!

முதல் கால் வினாடி: அட, ஏதோ நடந்திருக்கு ந்னு கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
இரண்டாவது கால் வினாடி: இது ஒரு பிரச்சினைன்னு முடிவு பண்ணி உடம்பு உடனடியா சில வேதிப்பொருட்களை எல்லாம் சுரக்க ஆரம்பிக்குது.
அடுத்த அரை வினாடி: அந்த வேதிப்பொருட்கள் எல்லாம் உடம்பு முழுவதுமும் மூளைக்குள்ளும் பரவுது. உடம்பு இவை சொல்கிற சேதி எல்லாம் கேட்டு சில எதிர்வினைகளை ஆரம்பிக்குது. இது சில தசைகள் இறுகறதாவோ, கண்ணீர் விடுவதாவோ, கவனத்தை குவிப்பதாவோ இல்லை மூச்சு விடுவதில வித்தியாசமாகவோ இப்படி பலவிதமா இருக்கலாம்.
அடுத்த அஞ்சு வினாடி: இந்த வேதிப்பொருட்கள் எல்லாம் உடம்பில போகிற இடங்களில இருக்கும் திசுக்களுக்கு செய்தி சொல்லி புதுசா வேதிப்பொருட்களை சுரக்க வைக்கும். குளத்தில கல்லை விட்டு எரிஞ்சால் எப்படி அலை அலையா சுத்தி விரிஞ்சுப்பரவுமோ அப்படி வேதிப்பொருட்களோட சுரப்பு அலை அலையா அதிகமாகும்.

ஆறு வினாடிகளில முதல்ல சுரந்த வேதிப்பொருட்கள் எல்லாம் காணாமல் போயாச்சு. ஆனா அவை சொன்ன சேதி கேட்டு உடம்பு தொடங்கின எதிர்வினையை இப்ப அனுபவிச்சுக்கொண்டு இருப்போம். இது அழுகையாஇருக்கலாம்; சிரிப்பா இருக்கலாம். பலவிதமா இருக்கலாம். சோகமா அழுது கொண்டு இருக்கலாம்; கோபமா யாரையோ திட்ட முனையலாம்; அதிர்ச்சியில உறைஞ்சு இருக்கலாம்; இல்லை ஓடிப்போக ரெடியா இருக்கலாம். எல்லாம் முதல்ல சுரந்த வேதிப்பொருட்கள் எப்படி எதிர்வினையை உண்டாக்கணும்ன்னு நீங்க கத்துகிட்டு இருக்கீங்களோ அதைப்பொருத்தது.

இப்ப ஒரு ஆச்சரியமான விஷயத்தை பார்க்கலாம். முதல்ல நடந்த வேதிப்பொருள் சுரப்பு அனிச்சை செயல்; அது நம்ம கட்டுப்பாட்டில இல்லை. அதுக்கான எதிர்வினை காலங்காலமா வரது. ஆனா இப்ப ஆறு வினாடி போன பிறகு இன்னும் அதே மாதிரி எதிர்வினை இருக்குன்னா அந்த வேதிப்பொருட்கள் இன்னும் சுரக்குது, நாம அப்படி இருக்க தேர்ந்து எடுத்து இருக்கோம்ன்னு அர்த்தம். இந்த தேர்வு நம்மோட முடிவு. இது நம்ம கட்டுப்பாட்டில இருக்கு; மாத்த முடியும். தொடர்ந்து எதிர்வினை இருக்கணும்ன்னு ஒண்னுமில்லை. அல்லது வேற மாதிரி எதிர்வினை இருக்கலாம். அதை நாம பயிற்சியால கொண்டு வர முடியும்!

நாம எல்லாருக்குமே இந்த வேதிப்பொருட்கள் உடம்பில இருக்கு. இவை செய்தி சொல்லவும் எதிர்வினைக்கான சக்தியை கொடுக்கவும் பயனாகுது. நாம உணர்வுசார்நுண்ணறிவில முன்னேறிட்டா இதை துல்லியமா ஆராயலாம். இதனால உருப்படியான திசையில நம்மை கொண்டு போகும்ன்னு எதிர்பார்க்கலாம்.





















No comments:

Post a Comment