கடந்த
சில வருஷங்களில உணர்வுசார்நுண்ணறிவு
பத்தி நிறைய ஆராய்ச்சிகள்
நடந்து இருக்கு.
மக்களுக்கு
உதவ இதை எப்படி அளக்கறதுன்னு
ஆராய்ச்சிகள் செய்திருக்காங்க..
இந்த
ஆராய்ச்சிகள்,
எங்களோட
அனுபவம் எல்லாம் என்ன
சொல்லுதுன்னா,
உணர்வுசார்நுண்ணறிவு
சிலருக்கு சிலதை குறைக்குது;
சிலருக்கு
சிலதை அதிகமாக்குது!
எதெல்லாம்
அதிகமா இருக்கலாம் எதெல்லாம்
குறைவா இருக்கலாம்ன்னு
உங்களுக்கு கற்பனை இருந்தா
சொல்லுங்க!
|
|
இதெல்லாம்
நமக்கு குறைஞ்சா எவ்வளோ
நல்லா இருக்கும்? |
ரைட்!
இதெல்லாம்
இன்னும் அதிகமா இருந்தா
எப்படி இருக்கும்?
|
நானும்
என் அக்காவும் சிரிச்சுத்தான்
விளையாடிகிட்டு இருந்தோம்.
திடீர்ன்னு
அவ எனக்கு கோபமூட்ட ஆரம்பிச்சா….
ஹும்!
இப்ப என்னை
வெளியே அனுப்பிட்டாங்க!
|
எனக்கு
நிறைய நல்ல நண்பர்கள்
இருக்காங்க. அவங்களோட
எப்போ வேணா பேச முடியும்.
நான் சந்தோஷமா
இருக்கேன்.
|
போரடிக்குது.
நிறைய செய்ய
வேண்டிய வேலை எல்லாம்
இருக்குன்னு தெரியும்தான்.
இருந்தாலும்
எதுவும் செய்ய இப்ப எனக்கு
சக்தி இல்லே…………
|
பசங்க
ஏதாவது தப்புத்தண்டா பண்ணா
என்னால அவர்கள நிறுத்த
முடியும். குறைஞ்சது
என்னால அதுல மாட்டிக்காம
நகர்ந்துட முடியும்.
|
என்
நண்பர்கள் விளையாட்டுல
என்னையும் சேத்துகிட்டாங்கன்னா
நல்லா இருக்கும். ஆனா
எப்படி அவங்களை அதை செய்ய
வெக்கறது?
|
சில
சமயம் மோசமான மூட்ல இருந்தேன்னா
கொஞ்ச நேரத்துல அதுலேந்து
வெளி வந்துட முடியும்.
|
என்கிட்ட
நிறைய ஐடியா எல்லாம் இருக்கு.
ஆனா யாரும்
நான் சொல்லறதை கேட்க
மாட்டேங்கறாங்க. நான்
திமிரோட பேசறேனாம்!
ஆனா அவங்க
ஐடியா எல்லாம் போரடிக்குதே?
|
ஹோம்
வொர்க்கா? என்
அப்பா அம்மாவுக்கு அது
பிரச்சினையே இல்லை.
ஏன்னா அதை
அவங்க சொல்லாமலே செய்து
முடிக்க கத்துக்கிட்டேனே?
|
அந்த
பரிட்சைல எல்லா விடைகளும்
எனக்குத்தெரியும்.
ஆனா அந்த
நேரத்துல ஒண்ணுமே ஞாபகத்துக்கு
வரலை!
|
என்
தம்பி சில சமயம் கடுப்படிப்பான்;
ஆனா அதை
எப்படி சமாளிக்கறதுன்னு
எனக்குத் தெரியும்.
அதனால
எப்பவும் நாங்க ஜாலியா
விளையாடிக்கிட்டே இருப்போம்!
|
படத்தில
இருக்கற பசங்க எல்லாரும்
எப்படி இருக்காங்க? என்ன
உணர்ச்சில இருக்காங்கன்னு
சொல்லுங்க பார்க்கலாம்!
இதுல
யாருக்கும் இருக்கிற பிரச்சினையை
உங்களால தீர்த்து வைக்க
முடியுமா?
No comments:
Post a Comment